ஜேர்மனியின் சரக்கு விமான மையத்தில் ட்ரோன் தாக்குதல் – ரஷ்யா மறுப்பு

ஜேர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் டிரோன் தாக்குதலை பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது.

இது, ரஷ்யா மீது ஆதாரமின்றி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று தூதரகம் கூறியுள்ளது.

அதேநேரம் ஜேர்மனியில் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு புதிய அலை குறித்து தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தி அறிக்கையொன்றையும் பகிர்ந்துள்ளது.

கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஒரு முக்கியமான பொது சரக்கு மற்றும் நேட்டோ தளவாட மையமான லீப்ஜிக் ஹாலே விமான நிலையத்தில், டிரோன் ஒன்று விழுந்தது.

இந்த விமான நிலையம், உக்ரைனின் அன்ரனோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பல பெரிய An-124 சரக்கு விமானங்களின் தளமாகவும் உள்ளது.

இந்த டிரோனில் வெடிபொருட்கள் மற்றும் ஒரு டெட்டனேட்டர் பொருத்தப்பட்டிருந்ததாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கூடுதலாக, விமான நிலையத்திற்கு அருகில் சரக்கு விமானம் ஒன்று டிரோன் என நம்பப்படும் மர்ம பொருள் மீது மோதியது.

ஜெர்மன் அரசாங்க உறுப்பினர்களும் பிற அதிகாரிகளும் இந்தச் சம்பவத்திற்காக எந்தவொரு வெளிநாட்டையும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டவில்லை, ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யா மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த ரஷ்யா தாக்குதல்களை மறுத்ததுடன், ஜெர்மனி ரஷ்யா மீது கொண்டிருக்கும் வெறுப்பையே இந்த குற்றச்சாட்டுகள் புலப்படுத்துவதாக கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles