மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லார் பிரதான சாலையில், கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர் எனவும், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்ததனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 9:21 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது.

மோதலைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையை கடக்க தயாராக இருந்த 03 மாணவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், 17 வயதுடைய சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து மற்றும் மோதலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles