22ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது,

சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, அந்த அரசமைப்புத் திருத்தம் மக்ளின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என மேலும் கோரியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65இல் இருந்து 67 ஆக உயர்த்தவும் –

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 இல் இருந்து 65 ஆக உயர்த்தவும் இந்தத் திருத்தம் வழி செய்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles