பிரிட்டனில் இருந்து வெளியேறிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!

பிரிட்டன் விமானப்படைத் தளத்திலிருந்து தனது B-1 ரக குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொண்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லண்டனுக்கு வடமேற்கே அமைந்துள்ள RAF ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) விமானப்படைத் தளத்தில் ஒரு டசின் B-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்தத் தளத்தை குறிவைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சதியில் ஈரானுக்குத் தொடர்பு இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக இங்கிலாந்துப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கடந்த புதன்கிழமையன்று தெரிவித்தார்.

இச்சதியுடன் தெஹ்ரானை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறிய ஈரான், இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரை வரவழைத்து விளக்கம் கேட்டது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஏவுகணை தளங்களைத் தாக்க, ஃபேர்ஃபோர்டில் நிறுத்தப்பட்டிருந்த குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்த அமெரிக்காவை பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்திருந்தது.

அந்தத் தளத்திற்கு எதிரான பயங்கரவாதச் சதித் திட்டங்கள் குறித்த பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில், அங்கிருந்து விமானங்கள் அகற்றப்பட்டதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ முதலில் செய்தி வெளியிட்டது.

சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். அதேவேளையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் இதில் வெளிநாட்டுத் தரப்பு ஒன்றின் சதி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles