இந்தியா- இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை” – இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை

ஃபிளை துபாய் சம்பவத்துக்குப் பிறகு இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய இஸ்லாமிய பயங்கரவாத அலை எழுதிருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கூறியதாவது:

“பயங்கரவாதிகள் நம்மைவிட துரிதமாகச் செயல்படுகின்றனர். அவர்களை நாம் விஞ்ச வேண்டும் என்றால் நாம் நமது நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். அடுத்த பயங்கரவாத தாக்குதல் அலையை முன்கூட்டியே தடுக்க விரும்பினால், நாம் விரைவாக செயல்பட வேண்டும். அடுத்த அலை நிச்சயம் வரும்.

ஹமாஸ் குழுவின் முக்கியத் தலைவர்கள் சிலர் அண்மைக்காலமாக பாகிஸ்தான், வங்கதேசத்தில் காணப்பட்டுள்ளனர். ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தாய்பா பயங்கரவாத அமைப்புகள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சிகளில் ஹமாஸின் நஜி ஜாஹிர், காலித் அல் கடுமி ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது.

2025 பஹல்காம் தாக்குதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் உத்தியின் வெளிப்பாடு. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஹமாஸ் வெகுவாக ஈர்த்துள்ளது. ஹமாஸ் பிரதிநிதிகள் அடிக்கடி பாகிஸ்தான் வந்து செல்வதன் பின்னணியில் என்னவிருக்கிறது என்பது முழுமையாகத் தெரியவில்லை.

ஆனால், பயங்கரவாதிகளின் இந்தக் கூட்டணி தான் இப்போதைய யதார்த்தம். உலக நாடுகள் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள, பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெற்றிகரமாகக் கடக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்மையில் ஃபிளை துபாய் விமானத்தில் நடந்த தாக்குதல் தனிப்பட்ட ‘ஓநாய் தாக்குதலா’ என்ற விசாரணை இன்னும் முடியவில்லை. இருப்பினும் இதுபோன்ற தாக்குதல்கள் தான் இப்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது, சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்படும். அதன்பின்னர் பிரதமர் அல்லது உயர்மட்ட தலைவரோ பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள விமானத்தை இடைமறித்து தாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும். ஜெட் விமானம், பயணிகள் விமானம் என எதுவாக இருந்தாலும் முடிவு அரசு தலைமையின் முடிவாக இருக்கும்.

ஆனால், அந்த விமானத்தின் விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலும், பயணிகளின் தைரியமும் தான் மிகப்பெரிய தாக்குதலை தவிர்த்திருக்கிறது. மச்சாரின் ஹீரோயிஸத்துக்கு நன்றி” என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles