அமெரிக்காவில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை – ஒப்புதல் அளித்த ட்ரம்ப்

கடந்த 2009ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள போர்ட் ஹூட் இராணுவ முகாமில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற இராணுவச் செயலாளர் பீட் ஹெக்செத் அளித்த பரிந்துரைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது 1961 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக அமையும்.

கன்சாஸில் உள்ள இராணுவச் சிறையிலிருந்து இண்டியானாவில் உள்ள பெடரல் சிறைக்கு இவரை மாற்றி தண்டனையை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவக் கொள்கையின்படி, அதிபரின் ஒப்புதல் கிடைத்த 60 நாட்களுக்குப் பிறகும், 150 நாட்களுக்குள்ளும் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles