ஈரானுக்கு சீனாவும் ரஷ்யாவும் எந்தக் வகையிலும் உதவி செய்யவில்லை எனத் தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு உதவினால் மொஸ்கோவும் பீஜிங்கும் அதிகமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு உதவி செய்வதாக தமது விமர்சகர்களும் எதிராளிகளும் கூறுவதைத் தாம் கவனித்துள்ளதாக டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“அவர்கள் உதவி செய்கிறார்கள் என்றால், அது மிகக் குறைந்த அளவிலேயே இருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு உதவி செய்கிறார்கள் என நான் எந்த வகையிலும் நம்பவில்லை. அவர்கள் இழப்பதற்கு அதிக விஷயங்கள் உள்ளன, அப்படி ஏதேனும் நடந்தால் அது எமக்குத் தெரியவரும், அதுவும் மிக விரைவாகவே தெரியவரும்” என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம் சீனத் தலைவர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது, ஈரானுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிராக டிரம்ப் எச்சரித்திருந்ததாகவும், அதற்குச் சீனா அவ்வாறு செய்யாது என அவரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.
