கைதடியில் கோர விபத்து; இரு இளைஞர்கள் மரணம்! – கைபேசியில் வீடியோ எடுத்தவாறு வேகமாகச் சென்றமையால் துயரம்

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் தங்களது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு மிகக் கூடிய வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினர் என்றும், இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அதிவேகம் மற்றும் கவனயீனம் காரணமாக இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles