மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் பென்டகனின் திட்டம் இரத்து

2009ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் Fort Hood துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை கொன்றார் என குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ மனநல மருத்துவரான நிதால் மாலிக் ஹசனின் Nidal Malik Hasan மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் பென்டகனின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

ஹசனின் மரணதண்டனை டிசெம்பர் 3ஆம் திகதி துப்பாக்கிச் சுடும் படையால் நிறைவேற்றப்படவுள்ளது.

இது தொடர்பில் தனது ட்ருத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “மரணதண்டனையை அனைவரும் காணும் வகையில் நேரலையில் ஒளிபரப்புவது, ஹசனைப் போன்ற பயங்கரவாதிகள் மற்றும் கீழ்த்தரமானவர்களை அமெரிக்கா எவ்வாறு கையாளுகிறது என்பதை உலகம் காண ஒரு வலுவான தடுப்பாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், பல நல்ல மற்றும் நல்லெண்ணம் கொண்ட மக்கள், நேரலை மூலமாகவோ அல்லது வேறு எந்தக் காட்சி சாதனம் மூலமாகவோ அவர் இறப்பதைப் பார்க்க விரும்பவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் நேரில் கலந்துகொள்ள விரும்பினால், அவர்கள் மரணதண்டனையை நேரில் காணலாம் என்றும் அவர் கூறினார்.

மரணதண்டனையை ஒளிபரப்புவதற்கான பென்டகனின் அசல் திட்டம், குடியரசுக் மற்றும் ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles