தாயின் நினைவாக நெடுந்தீவில் விடப்பட்ட படகு தமிழகத்தில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் மரணித்த ஒருவரின் நினைவாக கடலில் விடப்பட்ட சிறிய ரதத்துடனான படகினால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் , மண்டபம் கடற்கரையை அண்டிய பகுதியில் மரத்திலான சிறுபடகில் , சிறிய ரதத்துடன் படகொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில் வேறு பொருள்களோ அல்லது நபர்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

படகில் ‘பவள ரதம்’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், ‘WARD No.13 DELFT EAST SRI LANKA’ என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. இதனால், படகு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளின்போது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் காலமான தமது தாயாரின் நினைவாக அவரது குடும்பத்தினர் சிறிய ரதம் ஒன்றை உருவாக்கியமை தெரியவந்துள்ளது. அந்த ரதத்தில் தாயாரின் புகைப்படத்தை வைத்து, அதனைச் சிறிய படகில் ஏற்றி கடலில் விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தாயின் நினைவாகக் கடலில் விடப்பட்ட படகே கடல் நீரோட்டத்தின் காரணமாக தமிழகக் கரையில் ஒதுங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles