பிரித்தானியாவை தாக்கிய புளோ புயலுக்கு இருவர் பலி!

பிரித்தானியாவை தாக்கிய புளோ புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி புயல் தாக்கத்தினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதற்கமைய 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் 60 வயதுடைய ஒருவரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கு 84 மைல் வேகத்தில் வீசிய உச்சபட்ச பலத்த காற்றினால் லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles