Sangathy
News

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வாக்களிப்பில் கலந்துகொண்டாரா சமல் ராஜபக்ஸ?

Colombo (News 1st) உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ பங்குபற்றியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

குறித்த பிரேரரணை பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை 60 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

பிரேரரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வௌியாகியிருந்தன.

எனினும், குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ சபையில் இருக்கவில்லை என வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைத்தன்மையற்றவை என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பில் கலந்துகொண்ட அவர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உறுதிப்படுத்தினார்.

Related posts

Campaign finance Regulation Act effective from 24 January- Minister of Justice

Lincoln

Excise duty on all varieties of liquor, wines, beer etc. will be increased by 20% from midnight today (03) – Ranjith Siyambalapitiya

Lincoln

President on inspection tour of LIOC’s Lower Tank Farm in Trincomalee

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy