50 கிலோகிராம் அடிக்கட்டு பசளை விலை 1000 ரூபாவால் குறைப்பு

Colombo (News 1st) இன்று (15) முதல் 50 கிலோகிராம் அடிக்கட்டு பசளை மூடை 1000 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அதன் புதிய விலை 14,000 ரூபாவென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதுவரை காலமும் கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக 50 கிலோகிராம் எடை கொண்ட அடிக்கட்டு பசளை மூடை 15,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த போகம் ஆரம்பிக்கப்பட்ட போது, 22,000 ரூபாவிற்கும் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட அடிக்கட்டு பசளையை 19,500 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் சிறுபோக ஆரம்பத்தில் குறித்த அடிக்கட்டு பசளை மூடை 4500 ரூபாவால் குறைக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு இன்று முதல் புதிய விலை குறைப்பின் பிரகாரம் அடிக்கட்டு பசளை மூடையை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles