Sangathy
News

ஹமாஸ் தீவிரவாதத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

Colombo (News 1st) ஹமாஸ் தீவிரவாதத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உரிமையும் இஸ்ரேலுக்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் அமெரிக்கா நிற்குமெனவும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமெனவும் அமெரிக்க ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல்களில் 14 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் பணயக்கைதிகளாகப் பிடிபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஹமாஸ் அமைப்பின் இந்த வெறித்தனமான செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

கொல்லப்பட்ட அல்லது காணாமல் போயுள்ள அமெரிக்க பிரஜைகள் தொடர்பான அடையாளங்கள் அதிகாரிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Udaya to raise privilege issue against Speaker

Lincoln

Showers in Western, Sabaragamuwa, North Western, Galle and Matara districts in afternoon or night

Lincoln

சுகாதார சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ​சுகாதார செயலாளர்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy