Sangathy
News

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் உயிரிழந்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று(28) அதிகாலை அவர் உயிரிழந்ததாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை துணை தூதுவர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் சாந்தன் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு, இரத்த பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு 55 இலட்சம் ரூபா அபராதம்

Lincoln

10 more Sri Lankan nationals arrive in Rameswaram

Lincoln

Attacks on farmer leaders: MONLAR condemns inaction of authorities

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy