Sangathy
News

முன்னாள் ஜனாதிபதியின் இல்லம் தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் (Paget Road) அமைந்துள்ள இல்லத்தை, அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் பயன்படுத்த ஏதுவாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ரியந்த ஜயவர்தன, காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி, குறித்த அமைச்சரவை தீர்மானமானது பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் பங்கேற்றிருந்த போதே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது இயற்கை நியதிகளுக்கு எதிரான செயற்பாடு  எனவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளுக்கமைய தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

Related posts

UN: Coronavirus pandemic could push tens of millions into chronic hunger

Lincoln

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைக் கோவையும் மாதிரி விண்ணப்பமும் வௌியீடு

Lincoln

வவுனியாவில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy