Tuesday, October 22, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Home27.08.2024 செவ்வாய்க்கிழமை - இன்றைய இராசி பலன்

27.08.2024 செவ்வாய்க்கிழமை – இன்றைய இராசி பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம்  பதினோராம் நாள் செவ்வாய்க்கிழமை.  ஆங்கில வருடம் 27.08.2024

இன்றைய இராசி பலன்

மேஷராசி

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். தொழில் அதிபர்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். உரிய நேரத்தில் உணவு அருந்துதல் நன்மை தரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். பணப் பிரச்சினை இருக்காது.

ரிஷபராசி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனராசி

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள் வது நல்லது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகு முறை அவசியம்.

கடகராசி

திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் திறமையை அனைவருக்கும் உணர்த்துவீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். விரும்பிய பெண்ணுக்கு காதல் தூது விடுவீர்கள். பெரியோர்களின் ஆசியால் திருமண பேச்சை தொடங்குவீர்கள்.

சிம்மராசி

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.

கன்னிராசி

இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்ராசி

மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்தும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்ப தைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி யில் செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சிரமங்கள் ஏற்படும்.

 

விருச்சிகராசி

முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும்.

தனுசுராசி

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற் பனை எப்போதும் போல் இருக்கும்.

மகரராசி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.

கும்பராசி

மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள். நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். உடலில் மாதவிடாய் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி  காண்பீர்கள்.

மீனராசி 

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments