பெண்களின் ஆடைகளை அணிந்து மாணவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிங்கப்பூரின் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறையுடன் 4 பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான 40 வயது ஷாரிஸால் ஷாஃபீ தன்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரின் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளி மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், 15 வயதான வேறு இரு சிறுவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவும் வற்புறுத்தியதுடன், அதனை காணொலியாகவும் பதிவு செய்திருந்தார். இவ்வாறான ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் 2023 முதல் 2024 காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, இவருக்கு எதிராக மேலும் 10 குற்றச்சாட்டுகளும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஷாரிஸால் ஷாஃபீ சிங்கப்பூர் பொலிஸ் துறையில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
