காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பியோடியுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை பொலநறுவை – மெதிரிகிரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தனியார் வங்கியில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்படடார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருபவை வருமாறு,
படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரின் அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை குறித்த யுவதி ஏற்கவில்லை. இந்த நிலையில், விரக்தியடைந்த இளைஞர் குறித்த யுவதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்யப் பொலநறுவை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
