இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து; அஸாமில் 5 பேர் பலி!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் 5 விமானப் படையினர் உயிரிழந்தனர்.

ஜோர்ஹாட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோதே விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான AN-32 விமானம் இந்திய விமானப்படையின் 43 வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒன்றாகும்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இது குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles