Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கை – இந்திய உறவினை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.