Mr Sinnathamby Rajaratnam

1ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!
எத்தனை ஆண்டானாலும் எம் அப்பா
உங்களை எப்படி நாம் மறப்போம்!
இறைவனடி சேர்வது இயல்புதான் எனினும்
எம் இதயம் இன்னும் அதையேற்க மறுக்குதே
காலம் கரைந்து போவதைக் கணக்கிட்டுப் பார்த்து
பாசத்தைக் கரைத்து விட முடியுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் நினைவாக 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று எமது இல்லத்தில் இடம்பெறவுள்ள ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்