அமரர் சின்னத்துரை திலகலட்சுமி
பிறப்பு10 OCT 1932, இறப்பு24 NOV 2014
வயது 82
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) வட்டக்கச்சி, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரம் மாயவனூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை திலகலட்சுமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள்
எட்டு ஓடி மறைந்ததம்மா…
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே அங்கே
அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது!
ஆண்டுகள் பல சென்றாலும்- எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் மீள முடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே!
தகவல்: குடும்பத்தினர்