அமரர் வேலுப்பிள்ளை கனகலிங்கம் (சிவபாதம்)

பிறப்பு18 OCT 1946, இறப்பு28 MAR 2022

வயது 75

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு, Sri Lanka சுவிஸ், Switzerland கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு ஊரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சுவிஸ், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-03-2023

எங்கள் அப்பா என்னும் ஆண் தேவதை
ஆழ்ந்து உறங்கி, அருவமாய் மாறி
இன்றோடு ஓராண்டு ஆகுறது!

பூவுடல் விட்டு பூவுலகை தாண்டி
வானுலகில் மின்னும் நட்சத்திரமாய்
நீங்கள் எங்களை வழிநடத்தும் போதெல்லாம்
உங்களை உணராத நாளில்லை!
ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் நீங்கள் அருகில் இல்லாத போது
எங்களை ஆரத்தழுவி அணைத்துக்கொள்கிறது,
உங்கள் நினைவுகளும் நீங்கள் கூறிய வார்த்தைகளும்.

உங்களை இழந்த நொடியில்
எங்கள் உயிரின் ஒரு பாதி பிரிந்தது என்னவோ உண்மை தான்!
ஆனால், நாங்கள் சிவபாதத்தின் பிள்ளைகள் என
பிறருக்கு அறிமுகமாகும் போதெல்லாம்
எங்களின் பிரிந்த பாதி எங்களுடன் மீண்டும் ஒட்டிக்கொள்கிறது அப்பா!

இறைவா! அப்பாவை இழந்த பிள்ளைகளின் சார்பில்
உனக்கோர் விண்ணப்பம்,
இறுதிவரை தன் குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாக்களுக்கு
ஆயுளை அதிகமாய் கொடு,
ஏனெனில் தன் நெஞ்சில் சுமக்கும் பிள்ளைகளின் பெருவாழ்வை பார்த்து
பெருமூச்சு விடுவதற்குள் தான் அவர்களை
உன்னுடன் அழைத்துக்கொள்கிறாயே!

பாணாவிடையான் பாதத்தை பற்றிக்கொண்டீர்கள்
அவன் உங்களை பக்குவமாய்
பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன்
உங்கள் கனவுகளையும் நினைவுகளையும் சுமந்து
மாறாத ரணங்களுடன் எங்கள் வாழ்க்கையை தொடர்கிறோம்!

ஓராண்டு என்ன ஒரு கோடி ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் இடம் எங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றிடமே!
ஆழ்ந்து உறங்கியது உங்கள் உடல் மட்டும் தான் அப்பா,
எங்கள் உயிர் உள்ளவரை
உங்கள் உயிர் எங்களுக்குள் வாழும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!! 

தகவல்: குடும்பத்தினர்
admin

admin

Leave a Reply

%d bloggers like this: