Sangathy
News

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

Colombo (News 1st) இன்று(29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. தற்போது 400 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 340 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. தற்போது 510 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலின் புதிய விலை 375 ரூபாவாக அமையவுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாக அமையவுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

305 ரூபாவிற்கு விற்கப்பட்டும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆழ்கடலை ஆராயவுள்ள இந்தியாவின் Matsya 6000 நீர்மூழ்கிக் கப்பல்

Lincoln

Angering China, Australia suspends extradition treaty with Hong Kong, extends visas

Lincoln

கொழும்பின் சில பகுதிகளில் 24 ஆம் திகதி 16 மணித்தியால நீர்வெட்டு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy