Sangathy
News

3 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சபரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(02) 75 மில்லிமீட்டர் வரையான மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகள், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  பிரிவுகளுக்கே இவ்வாறு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி

Lincoln

Two WW II planes collide mid-air during airshow in Texas, 6 killed

Lincoln

Debt restructuring strategy out in April

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy