Sangathy
News

அமெரிக்காவில் அமெரிக்காவில் இரண்டு மாதங்களில் மூன்று வங்கிகள் திவால்

Colombo (News 1st) அமெரிக்காவில் Silicon Valley வங்கி மற்றும் Signature வங்கிகளைத் தொடர்ந்து, First Republic வங்கியும் திவாலாகியுள்ளது.

இந்த வங்கியை JPMorgan Chase வங்கி வாங்கியுள்ளது.

அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான Silicon Valley வங்கி நிதி நெருக்கடியால் திவால் ஆனது. இந்த வங்கியைத் தொடர்ந்து சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனது. இந்த நிலையில், இரண்டே மாதங்களில் மூன்றாவதாக கடும் நிதிச்சிக்கலில் சிக்கியிருந்த, சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய First Republic வங்கியும் திவால் ஆகியுள்ளது. இதையடுத்து, இந்த வங்கியை  JPMorgan Chase  வங்கி வாங்கியுள்ளது.

First Republic வங்கி, திங்கட்கிழமை முதல் JPMorgan Chase வங்கியாக செயற்படும் என, Federal Deposit Insurance Corporation (FDIC) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வங்கிகளில் 14 ஆவது பெரிய வங்கியாக திகழ்ந்த இந்த வங்கி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் உட்பட பெரும் பணக்காரர்களுக்கு கடன் கொடுத்திருந்தது,  Silicon Valley மற்றும் Signature வங்கியைப் போலவே, இந்த வங்கியில் உள்ள டெபாசிட்களுக்கும் காப்பீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்திருக்கிறது. இந்த வங்கியில் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

இம்மூன்று வங்கிகளும் உயரும் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப செயற்படத் தவறிய வங்கிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்து கரையொதுங்கிய 1500 கிலோகிராம் எடையுடைய கடற்பசு

Lincoln

உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றவில்லை: C.V.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

Lincoln

வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம் – நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy