Sangathy
News

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(11) ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று(10) 24 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.

10 அலுவலக ரயில்கள், 6 தபால் ரயில்கள் மற்றும் தூரசேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று(10) சில ரயில் சேவைகள் தாமதமானதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

ரயில்வே வணிக பிரதி பொதுமுகாமையாளர் பதவிக்கு ஊழல்வாதி என தெரிவிக்கப்படும் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம்(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ரயில் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

Related posts

இழுபறியில் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி – இரகசிய வாக்கெடுப்புக்குத் தீர்மானம்

Lincoln

யாழ்.மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை – வட மாகாண விவசாய பணிப்பாளர்

John David

Colombo (News 1st) இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டொலரின் பெறுமதி 355 ரூபா வரை உயர்வடையும் என Hong Kong-இல் அமைந்துள்ள Natixis நிறுவனத்தை மேற்கோள்காட்டி Bloomberg இதனை தெரிவித்துள்ளது. டொலரின் இன்றைய விற்பனை பெறுமதி 336 ரூபா 16 சதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy