சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு
Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று(23) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தமைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று(23) காலை பாணந்துறை மீனவர் துறைமுகத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பகமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் 26000 மீன்பிடி படகுகளுக்கு தலா 150 லீட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.