Sangathy

Sangathy

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் குழாம் நேற்றிரவு(23) நாட்டை வந்தடைந்தது.

ஹஷ்மதுல்லா சஹீத்தின் தலைமையில் 15 வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இளம் சகலதுறை வீரரான அப்துல் ரஹ்மானுக்கும் ஆப்கானிஸ்தான் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, மொஹம்மட் நபி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தேசியமட்ட போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய சில வீரர்களுக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மோதவுள்ளன.

தொடரின் சகல போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

%d bloggers like this: