எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க தீர்மானம்
Colombo (News 1st) அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக தற்போது வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தகம், சந்தைப்படுத்தல் துறைகளை சேர்ந்தவர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
எதிர்கால எரிபொருள் இறக்குமதித் திட்டம், விநியோகம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.