Sangathy
News

ஒரு வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

Colombo (News 1st) இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41883 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

Related posts

4 பில்லியன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை – EXIM வங்கி இடையே இணக்கம்

Lincoln

Labour rights organisations urge brands to take responsibility for their workers in Sri Lanka

Lincoln

சூதாட்டத்திற்கு பணம் கொடுத்தவரிடம் 16 வயது மகளை ஒப்படைத்த தந்தை உள்ளிட்ட மூவர் கைது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy