Sangathy
News

அரச வைத்தியசாலைகளில் பல மாதங்களாக செயலிழந்துள்ள CT Scan இயந்திரங்கள் – அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம்

Colombo (News 1st) CT Scan உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் தொடர்ந்தும் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில CT Scan இயந்திரங்கள் பல மாதங்களாக செயலிழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறினார்.

இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளமையினால் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்ரகுப்தவிடம் வினவிய போது, குறித்த இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்காக நிதி அமைச்சிடம் இருந்து தற்போது நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறினார்.

அதற்கமைய, அவற்றை விரைவாக பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

Lankan envoy frowns at UN one sided resolutions against Sri Lanka

Lincoln

President’s two main challenges: Accountability and reconciliation

Lincoln

Over 400 bodies recovered from Bolivian streets, homes; 85% likely had Covid-19

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy