Sangathy
News

இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் 2,000 சிறுவர்கள்

Colombo (News 1st) இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது.

வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.

மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் கொண்ட சிறுவர் இதய நோய் பிரிவொன்றை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.

Related posts

இந்திய மீனவர்கள் 6 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது

John David

Malnutrition to rise due to increased poverty and high food prices

Lincoln

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy