Sangathy
News

கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு

Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலவசக் கல்விக்கான உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்வியை தனியார்மயமாக்கி, சமூகத்தின் கல்விச் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் என இதன்போது மாணவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

அவ்வாறு தனியார் மயமாக்குவதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதனை மீளப்பெறும் வரை தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் எதிர்ப்பில் ஈடுபட்ட மாணவர்கள், பின்னர் கலைந்து சென்றனர்.

Related posts

Cannabis growing law to cabinet soon: Minister

Lincoln

Tryon and de Klerk’s 124-run stand scripts South Africa’s turnaround win

Lincoln

யாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy