Sangathy
News

கெரி ஆனந்தசங்கரிக்கு கனேடிய அமைச்சரவையில் அமைச்சு பதவி

Colombo (News 1st) டொரன்டோ(Toronto) பாராளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) கனேடிய அமைச்சரவையில் பூர்வீக குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கெரி ஆனந்தசங்கரி க​னேடிய பாராளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கை தமிழர், அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய பிரதமர் Justin Trudeau நேற்று 7 அமைச்சர்களை நீக்கி, புதிய அமைச்சர்களை நியமித்தார்.

பிரதமர் முன்னிலையில் பதவியேற்ற கெரி ஆனந்தசங்கரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கெரி ஆனந்தசங்கரி, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், லிபரல் கட்சி சார்பில் ஸ்காப்ரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டி முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

சட்டத்தரணியான இவர், நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு மன்றங்களில் கனேடிய தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்

Related posts

China Development Bank team here to discuss debt related issues

Lincoln

சமனல வாவியிலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

Lincoln

நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் பலி..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy