Sangathy
News

நீர் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

Colombo (News 1st) நீர் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல்  மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சின் செயலாளர் R.M.W.S. சமரதிவாகர தெரிவித்துள்ளார்.

நீர் சுத்திகரிப்பிற்காக செலவாகும் மின்சார கட்டணம், இரசாயன கட்டணம், பொருட்கள் என்பவற்றை உள்ளடக்கியதான நீர் சுத்திகரிப்பு செலவுகளின் அடிப்படையில் விலைச்சூத்திரம் தயாரிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம், செலவினங்களுக்கு அமைய 6 மாதங்களுக்கு ஒரு முறை நீர் கட்டணம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும் பட்சத்தில்,  நீர் கட்டணமும் குறைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் குறைந்தளவு  நீர் அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சதவீதத்தினாலும்,  அதிகளவு நீர் அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த சதவீதத்தினாலும்  கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவின் செச்சினியா குடியரசில் பெண் பத்திரிகையாளர் மீது மிருகத்தனமான தாக்குதல்

Lincoln

Legislative Standing Committee agrees on 25% of youth representation under the proposed Local Authorities Elections (Amendment) Bill

Lincoln

4 அரச களஞ்சியசாலைகளில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருட்டு; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy