Sangathy
News

மோதலுக்கு தயாராகும் அசர்பைஜான்-ஆர்மீனியா: ஐ.நா அவசரக் கூட்டம்

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் (Nagorno-Karabakh) பிராந்தியத்துடன் வீதிப் போக்குவரத்தை அசர்பைஜான் படையினா் முடக்கியுள்ளதால், அந்த நாட்டிற்கும் அண்டை நாடான ஆா்மீனியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் இன்று (16) நடைபெறுகிறது.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அசபைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்த பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அசர்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் பலியானமை நினைவுகூரத்தக்கது.

Related posts

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களத்தில்

Lincoln

இந்திய நாடாளுமன்றுக்குள் கண்ணீர் புகைக் குண்டுடன் நுழைந்தவர்களால் பரபரப்பு

Lincoln

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy