அமரர் சாவித்திரி இலக்குமணபிள்ளை
பிறப்பு15 SEP 1954, இறப்பு16 SEP 2020
வயது 66
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada கொழும்பு, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாவித்திரி இலக்குமணபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ அம்மா…!
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து
பெருவாழ்வு எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு ஆண்டு மூன்று ஆனதோ!
மரணம் உங்களை எங்களிடம் இருந்து
பிரித்து விட்டாலும் எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…..!
தகவல்: குடும்பத்தினர்