Sangathy
News

பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிவுறுத்தல்

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(22) இரவு வேளையில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, தென்மேல் மற்றும் அதனை அண்மித்த மத்திய மேற்கு வங்காளவிரிகுடா கடற்பரப்பில் நீண்டநாள் மீன்பிடி படகுகள் பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, பதுளை மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளை பார்வையிட மற்றும் நீராடச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் உள்ளூர் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தலப்பட்டுள்ளது.

ராவண எல்ல, துன்கிந்த நீர்வீழ்ச்சி, தியலும நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

VAT hike likely to benefit mobile phone importers in gray market, further erode govt tax revenue

John David

காட்டு யானை தாக்கியதில் இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி பலி..!

Lincoln

CA issues summons on State Minister Nishantha

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy