Sangathy
News

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 400 காட்டு யானைகள் உயிரிழப்பு – வனஜீவராசிகள் திணைக்களம்

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானை – மனித மோதலினால் சுமார் 200 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

பல காட்டு யானைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன் வெவ்வேறு நோய்களாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் 6000 யானைகளே இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மனித நடவடிக்கைகளின் காரணமாக வசிப்பிடங்களை இழந்துள்ள காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ICC makes changes to Playing Conditions

Lincoln

காணாமல் போன நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா – நெல் சந்தைப்படுத்தல் சபை

John David

India’s Defence ministry is world’s biggest employer:‘Statista’ report

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy