Sangathy
News

கொழும்பு துறைமுக நகரில் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையங்களை அமைப்பது தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகரில் சுங்கத்தீர்வையற்ற சில்லறை வர்த்தக நிலையங்கள் அல்லது சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தகைமைகள் தொடர்பில் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் எனும் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, சுங்கத்தீர்வையற்ற சில்லறை வர்த்தக நிலையங்களை நடத்திச்செல்வதற்கு முதலீட்டாளரினால் குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும். 

குறித்த முதலீட்டாளருக்கு சுங்கத்தீர்வையற்ற வர்த்தகம் தொடர்பில் சர்வதேச ரீதியிலான அனுபவம் காணப்பட வேண்டும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதிகளை நடத்திச்செல்வதற்கு முதலீட்டாளரினால் குறைந்தபட்சம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Inclement weather wreaks havoc

Lincoln

PHU: UNHRC resolution could be tied to aid for Sri Lanka

Lincoln

The X-Press Pearl Disaster: From Flames to Prevention

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy