Sangathy
News

விஹாரமகாதேவி பூங்காவின் பொறுப்பை கொழும்பு மாநகர சபையிடம் வழங்க அனுமதி

கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவின் பொறுப்பை கொழும்பு மாநாகர சபையிடம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமது அதிகார சபைக்குட்பட்ட நிர்வாக பொறுப்பை கொழும்பு மாநாகர சபைக்கு மாற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.கே ரணவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் விகாரமஹாதேவி பூங்காவின் பொறுப்பு கொழும்பு மாநகர சபையின் கீழ் இருந்தது.

உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டில் விஹாரமகாதேவி பூங்கா நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

Related posts

Panadura lady aged 90 from elite family robbed by agency-provided domestic

Lincoln

Former top FBI official arrested after returning from Sri Lanka

Lincoln

வட மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy