Sangathy
News

யாழ்ப்பாணத்தில் பண மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு

Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து , கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி இடம்பெறுவதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த  குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருவரிடமிருந்து 20 இலட்சம் ரூபாவில் இருந்து 90 இலட்சம் ருபா வரை பண மோசடி இடம்பெற்றுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளைப் பார்த்து, பணம் செலுத்தியவர்களே இதில் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டாார். 

குறித்த பண மோசடிகள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
 

Related posts

யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரிடம் விசாரணை!

Lincoln

Diageo to launch Johnnie Walker whisky in paper bottles in 2021

Lincoln

யாழ். நகர் கடைகளில் தீ – இரு கடைகள் எரிந்து நாசம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy