Sangathy
News

ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் பொது நிறுவனங்களாக மாற்றப்படவுள்ளன

Colombo (News 1st) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும் என வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதலான புள்ளி விபரங்களை முன்வைத்து, இந்த அலைவரிசைகள் எவ்வாறு நட்டம் அடைந்துள்ளன என்பதை குழுவின் தலைவர் தௌிவுபடுத்தியுள்ளார். 

இதற்கமைய, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டு 277 மில்லியன் ரூபா நட்டத்தையும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டில் 457 மில்லியன் ரூபா நட்டத்தையும் அடைந்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த அலைவரிசைகளுக்கு திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இதற்கமைய, இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

மலையக மார்க்கத்திலான இரவு தபால் ரயில் தாமதமடையும்: ரயில்வே திணைக்களம்

Lincoln

Shortage of 160 essential medicines

Lincoln

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்- டயனா கமகே

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy