Sangathy
News

கொழும்பில் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம்

Colombo (News 1st) கொழும்பில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொழும்பிலுள்ள 26 தோட்டங்களில் 61,000 இற்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்த குறிப்பிட்டார். 

அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான புதிய யோசனை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக நிறைவேற்றப்பட்டது.

இதன் கீழ் தோட்டங்களில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களினால் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இவ்வாறு நிர்மாணிக்கப்படும் வீடுகளில் மக்களை குடியமர்த்தியதன் பின்னர், எஞ்சியுள்ள இடங்கள் முதலீட்டாளர்களுக்காக முதலீட்டு செயற்றிட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். 

செயற்றிட்டங்களுக்காக முதலீட்டாளர்களின் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

‘Finace Ministry could not have been unaware of SriLankan, CPC bonuses’

Lincoln

Govt. to import cattle from India, Pakistan

Lincoln

Navy apprehends 10 persons engaged in illegal harvesting of sea cucumber in northern waters

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy