Sangathy
News

நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக 3 கட்டடங்கள் முன்மொழிவு

Colombo (News 1st) நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான 3 கட்டடங்கள் தபால் திணைக்களத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்ததன் பின்னர், தபால் திணைக்களத்தின் விருப்பத்திற்கு அமைய அங்கு தபால் நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

நுவரெலியா தபால் நிலையம் அமைந்துள்ள பழைய கட்டடத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் முதலீட்டு செயற்றிட்டத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

தொல்பொருள் நினைவுச்சின்னமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அண்மையில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புகளை முன்னெடுத்திருந்தனர். 

எனினும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை பதில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு வலியுறுத்தல்

Lincoln

IMF loan will help bring down interest rates – CBSL

Lincoln

Kiriella accuses IMF of double speak

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy