Sangathy
News

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானம்

Colombo (News 1st) அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக இதுவரை அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 5,209 குடும்பங்கள், அந்த சலுகையை இழந்துள்ளதாக அவர் கூறினார். 

அடுத்த தவணைக் கொடுப்பனவை வழங்குவதற்கு முன்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தவணைக் கொடுப்பனவை கூடிய விரைவில் வங்கிகளுக்கு விடுவிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். 

சுமார் 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை கூடிய விரைவில் மீளாய்வு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

நலன்புரி நன்மைகள் சபை உறுப்பினர்களுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் நிதியமைச்சர் இந்த விடயங்களை கூறினார். 

Related posts

டெல்லியில் சிறிய அளவில் நில அதிர்வு

John David

இணையத்தளம் ஊடாக குற்றச் செயல்கள் அதிகரிப்பு..!

Lincoln

Sonia Gandhi joins Rahul’s Unify India Foot March

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy