Sangathy
News

ஒக்டோபரில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் அதே அளவில் குறைக்கப்படும்: கஞ்சன விஜேசேகர

Colombo (News 1st) கடந்த ஒக்டோபர் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், அதே அளவில் குறைக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இதற்கமைவாக வீடுகள், மத வழிபாட்டுத்தலங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம், அதே வீதத்தில் குறைக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபரில் வீடுகள், மத வழிபாட்டுத்தலங்கள், அரச நிறுவனங்களுக்கு 18% மின் கட்டண அதிகரிப்பும் தொழில்துறை மற்றும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு 12% அதிகரிப்பும் அரச நிறுவனங்களுக்கு 24% மின் கட்டண அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த மின் கட்டண அதிகரிப்பு வீதத்தை முற்றாக இல்லாமல் செய்து, மின் கட்டண குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அமைச்சர் கூறினார்.

Related posts

Lanka keen to import ethanol from India

Lincoln

MP arrested with 3.5 kilos of undeclared gold at BIA

Lincoln

பெரும்போகத்தில் 13 வகையான போகப் பயிர்களை பயிரிட இணக்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy