Sangathy
News

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

Colombo (News 1st) தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எதிர்வரும் 27 மற்றும் மார்ச் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தலுக்கு செலவிடப்படும் பணம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதுவரை ஒரு தேர்தலும் நடத்தப்படவில்லை.

அதன் காரணமாக குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு உரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

Related posts

Female local councillors less corrupt, more sensitive and law abiding – Chairman EC

Lincoln

Fonseka loses patience, calls for revival of aragalaya protests

Lincoln

அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy